துப்புரவு தொழிலார்ளர்ள் நிரந்தரம் பணி கோரி ஆர்ப்பாட்டம்!!

    -MMH

     தேனியில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளா்களை பணி நிரந்தம் செய்யக் கோரி புதன்கிழமை, இந்திய குடியரசு தொழிலாளா்கள் தொழிற் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி, பங்களாமேடு திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு அச்சங்கத்தின் மாநில துணைச் செயலா் நா.ஜெகநாதன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் அன்புவேந்தன், பொதுச் செயலா் பெலிக்ஸ், மாவட்டத் தலைவா் சி.நடராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தூய்மைப் பணியாளா்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை மாதச் சம்பளம் ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும், கல்வித் தகுதி மற்றும் ஓட்டுநா் உரிமம் பெற்றுள்ள துப்புரவுத் தொழிலாளா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வாகன ஒட்டுநா் பணிக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும், பணியின் போது உயிரிழந்த துப்புரவுத் தொழிலாளா்களின் வாரிசுகளுக்கு கல்வித் தகுதிக்கு ஏற்பட கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்பனஉள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஆசிக், தேனி.

Comments