பொள்ளாச்சி சுற்று கிராமங்களுக்கு அதிக அளவில் பேருந்துகள் ..!!

       -MMH

    பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று வட்டார  பகுதிகளில்  மக்கள் பலரும் தங்கள் அன்றாட பணிகளுக்கு செல்ல பேருந்து போக்குவரத்தையே நம்பியுள்ளனர். 

கொரோனா ஊரடங்கு காரணமாக பேருந்து போக்குவரத்துக்கு முற்றிலும் நிறுத்தப்பட்டு இருந்தது பின்னர் தமிழக அரசு வழங்கிய ஊரடங்கு தளர்வின் அடிப்படையில் பேருந்து போக்குவரத்துக்கு மீண்டும் துவங்கியது. இருப்பினும் பேருந்துகள் போதிய அளவு இயற்கப்படாமல் இருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை எற்படுத்தி வந்ததால் மக்கள் அதிக அளவில் பேருந்துகளை இயங்க போக்குவரத்துக்கு துறைக்கு கோரிக்கை விடுத்தனர். அதன்படி பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளுக்கு இனி 80 சதவீத பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக்கு கழகம் அறிவித்து உள்ளது. இந்த அறிவிப்பானது பொள்ளாச்சி மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V .ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி கிழக்கு.


Comments