"நான் அரசியலுக்கு வரவில்லை!!" - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு!!

 

     -MMH

நடிகர் ரஜினிகாந்த் சில நாட்களுக்கு முன்பாக அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும் இந்த மாத இறுதியில் கட்சியின் பெயர் சின்னங்கள் அறிவிக்க இருப்பதாகவும் அறிவித்தார். ஆனால் அதற்குள் அவரது உடல்நிலை மிகவும் பாதிப்புக்கு உள்ளானது ,அதனை தொடர்ந்து அவர் இன்று வெளியிட்டுள்ள மூன்று பக்க அறிக்கையில் தான் அரசியலுக்கு வர விரும்பவில்லை என்றும் தன்னை நம்பி வந்தவர்களை ஏமாற்ற விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய உடல் நிலையை கருத்தில் கொண்டு மருத்துவர்கள் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளதாகவும் தான் மக்களுக்கு நேரடியாக சேவை செய்ய இயலாது என்றும் தெரிவித்துள்ளார். தன்னால் இயன்ற அளவுக்கு எப்பொழுதும்போல் மக்களுக்கு உதவியாக இருப்பேன் என்று அறிவித்ததோடு மட்டுமின்றி தனக்கு இதுவரை ஆதரவு தெரிவித்து வந்த தமிழருவிமணியன் போன்றோருக்கு நன்றி தெரிவித்துள்ளார் .அவரது இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மட்டுமின்றி சில கட்சிகளையும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கும்  என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

நாளைய வரலாறு செய்திக்காக,

-V.இராஜசேகரன். தஞ்சாவூர் .

Comments