கழுதை சாணத்தில் போலி மசாலா! - தொழிற்சாலை கண்டுபிடிப்பு..!
உத்தரப்பிரதேசம் ஹத்ராஸ் மாவட்டம் : இந்த தொழிற்சாலை நவிபூர் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கலப்பட மசாலா தயாரிப்பதாக அருகில் வசிக்கும் மக்கள் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். உள்ளூர் காவல் பெரிதாக கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. காவல்துறைக்கு அழுத்தம் அதிகமானதால், சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையின் போது, கழுதை சாணம், வைக்கோல் மற்றும் சாப்பிட முடியாத வண்ணங்கள் மற்றும் அமிலங்கள் நிறைந்த டிரம்ஸ் உள்ளிட்ட போலி மசாலாப் பொருள்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பல மோசமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சில முன்னணி நிறுவனங்களான, 'கூட்டு நீதவான், பிரேம் பிரகாஷ் மீனா', மற்றும் சில உள்ளூர் பிராண்டுகளின் பெயர்களில் 300 கிலோவிற்கு மேல் போலி மசாலாப் பொருட்கள் விற்பனைக்கு தயராக இருந்ததை கண்டு அதிகாரிகளும்,மக்களும் அதிர்ச்சியில் உரைந்தனர்.
மீட்கப்பட்ட கலப்பட மசாலாப் பொருட்களில் கொத்தமல்லி தூள், சிவப்பு மிளகாய் தூள், மஞ்சள் மற்றும் மசாலா கலவை (கரம் மசாலா) ஆகியவை அடங்கும். 27 க்கும் மேற்பட்ட மாதிரிகள் சோதனைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளன, ஆய்வக அறிக்கை வந்தவுடன் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம் 2006 இன் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறினார்கள்.
கைது: தொழிற்ச்சாலையின் உரிமையாளர், இந்து யுவா வாகினி அமைப்பின் அலுவலக பொறுப்பாளராக இருக்கும் 'அனூப் வர்ஷ்னி' கைது செய்யப்பட்டுள்ளார். சி.ஆர்.பி.சி யின் 151 வது பிரிவின் கீழ் வர்ஷ்னி நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மசாலா தொழிற்சாலையை நடத்தி வரும் இடத்தில் அதை நடத்துவதற்கான உரிமத்தை பெறாமலே நடத்திவந்தது சோதனையில் தெரியவந்தது. போலி மசாலாப் பொருள்களை தயாரிப்பதற்காக யூனிட்டில் தயாரிக்கப்பட்ட மூல பொருட்கள் நகரத்தின் பிற பகுதிகளுக்கும் வழங்கப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-நம்ம ஒற்றன்.
Comments