பேட்டரி ஆயுளை கணிசமாக அதிகரிக்கின்ற கேனல் எலெக்ட்ரானிக்ஸ் அறிமுகம்.!!

 

    -MMH

    தற்போது வேகமான சார்ஜிங் (fast charging) பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் ஒரு பொதுவான தொழில்நுட்பமாக மாறியுள்ளது. மேலும் இது வசதியானது என்றாலும், இது பேட்டரியின் நீண்ட ஆயுளை பாதிக்கும். வேகமாக சார்ஜ் செய்வது ஸ்மார்ட்போனின் பேட்டரியின் ஆரோக்கியத்தை நீண்ட காலத்திற்கு எதிர்மறையாக பாதிக்கும். இந்த சிக்கலை தீர்க்க, கேனல் எலெக்ட்ரானிக்ஸ் (Canal electronics) என்ற துணைப்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது பேட்டரி கார்ட் (battery guard) என்றும் அழைக்கப்படுகிறது. இது பேட்டரி ஆயுளை கணிசமாக அதிகரிக்கிறது. மற்றும் இதன் விலை வெறும் 25 டாலர் (ரூ. 1,843) ஆகும்.

இது ஒரு டாங்கிள் போல தோற்றமளிக்கும் மற்றும் தொலைபேசி சார்ஜருக்கும் சார்ஜிங் கேபிளுக்கும் இடையில் இது இருக்கும். உங்கள் சார்ஜர் தொலைபேசியை சார்ஜ் செய்யும் வீதத்தை கட்டுப்படுத்துவதே இதன் செயல்பாடு. இது iOS மற்றும் ஆன்டுராய்டு ஆகிய இரண்டு சாதனங்களிலும் வேலை செய்கிறது. பல ஸ்மார்ட்போன் பயனர்கள் தங்கள் தொலைபேசியை இரவு முழுவதும் சார்ஜ் செய்யும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

நிறுவனம் உருவாக்கிய பயன்பாடானது, பயனர்கள் எழுந்திருக்கும் நேரத்தைத் தேர்ந்தெடுக்க செய்து அதற்கு தகுந்தாற்போல அவர்களின் தொலைபேசியை முழுமையாக சார்ஜ் செய்து விடுகிறது. பயனர் ஒரு நேரத்தைத் தேர்ந்தெடுத்த பிறகு, பேட்டரி கார்டின் வேலை ஆரம்பமாகிறது. முதலில் இது சார்ஜிங் நேரத்தை கணக்கிடுகிறது. தீவிரமான சார்ஜிங்கினால் ஏற்படக்கூடிய வெப்பநிலை அதிகரிப்பு இல்லாமல் தொலைபேசியில் 100 சதவீதம் சார்ஜ் செய்யப்படுவதை உறுதிசெய்கிறது. இதனால் பேட்டரி சிதைவு தடுக்கப்படும்.

சாதனம் அடையக்கூடிய அதிகபட்ச சார்ஜிங் வேகம் USB டைப்-C வழியாக 20V ஆகவும். USB டைப்-A வழியாக 5V ஆகவும் இருக்கும். “வேகமான சார்ஜர்களைப் பயன்படுத்துவது பேட்டரி சிதைவை அதிவேகமாக துரிதப்படுத்துகிறது” என்று கேனல் எலெக்ட்ரானிக்ஸ் குழுவின் தலைவர், முகமது மோர்சி தெரிவித்தார். “பேட்டரிகள் சிதைவதற்குக் காரணம் சார்ஜ் செய்வதே தவிர, டிஸ்சார்ஜிங் அல்ல.” “தொலைபேசியை சார்ஜ் செய்ய சிறந்த வழி இருப்பதாக நாங்கள் முடிவு செய்தோம்,” என்று அவர் கூறினார்.

“தொடர்ந்து சார்ஜ் செய்வதற்கு பதிலாக, அதிக ஓய்வு நேரங்களைக் கொடுக்க அதை மிக மெதுவான மற்றும் வேகமான முறையில் சார்ஜ் செய்ய முடியும். எனவே அது அதிக வெப்பமடையாது.” என்று அவர் மேலும் கூறினார். இதன் மூலம் பேட்டரி சிதைவு 50 சதவீதம் குறைவாக இருப்பதாக முடிவுகள் காண்பித்தன. ஏனெனில் சாதனம் வெப்பநிலை அதிகரிப்புகளை சரிபார்க்க முடிந்தது. இந்த தயாரிப்பு தற்போது கிக்ஸ்டார்ட்டர் வழியாக விற்கப்படுகிறது.

-சுரேந்தர்.

Comments