தஞ்சாவூர் மற்றும் பட்டுக்கோட்டையில் திமுகவினர் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் சாலை மறியல்!!

     -MMH

     தஞ்சாவூர்: தலைநகர் டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் மற்றும் வணிக அமைப்புகள் இன்று ஒருநாள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தன. 

அதற்கு ஆதரவு தரும் ஆதரவு தரும் வகையில் திமுகவினர் மற்றும் அதன் தோழமை கட்சிகள் இன்று தஞ்சை மற்றும் பட்டுக்கோட்டை பகுதியில் பேரணி நடத்தினர். அப்போது பட்டுக்கோட்டை பகுதியில்  திறந்து இருந்த கடைகளை மூட சொல்லி திமுகவினர் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் ஆத்துப்பாலம் பகுதியில் காவிரி மீட்பு குழு  சார்பாக  பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதன் அமைப்பாளர் திரு மணியரசன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு அந்தப்பகுதியில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். காவிரி மீட்பு குழுவை சேர்ந்த அமைப்பினர் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.  அப்போது அவர்கள் திடீரென்று  அந்த வழியாக சென்ற  பேருந்தை மறித்தனர் . காவல்துறையினர் சுமார் 75 பேரை கைது செய்தனர் ,அதன் பின்னர் அந்த பேருந்து புறப்பட்டு சென்றது .தஞ்சை,  பட்டுக்கோட்டை, பேராவூரணி, கும்பகோணம், பாபநாசம், அய்யம்பேட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் சுமார் 45 ஆயிரம் கடைகள் இன்று அடைக்கப்பட்டிருந்தன .இன்று விடுக்கப்பட்டிருந்த முழு கடையடைப்புக்கு பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்து தங்களது கடைகளை அடைத்து வைத்திருந்தனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

- V.ராஜசேகரன், தஞ்சாவூர். 

Comments