யானை தாக்கியதில் முதியவர் ஒருவர் மரணம் இருவர் படுகாயம்!!

 

     -MMH 

    கோவை தொண்டாமுத்தூரில் இன்று அதிகாலை  யானை தாக்கியதில் முதியவர்  ஒருவர் மரணம் இருவர் படுகாயம்!! 

கோவை  வனச்சரகத்திறகு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகிளில் ஏராளமான யானைகள் வசித்து வருகிறது. இந்த யானைகள் அவ்வப்போது மலை அடிவாரப்பகுதிகளில் உள்ள ஊர்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதுடன் மனித , வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிர் சேதமும் அவ்வப்போது  ஏற்படுகிறது. 

அவ்வாறாக இன்று அதிகாலை  ஒணப்பாளையம் யானை மடுவு வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டு யானை ஒன்று தாளியூர் , குளத்துபபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்ட சோளம் , வாழை உள்ளிட்ட பயிர்களை உண்டு   சேதப்படுத்தி உள்ளது.  காட்டுப் பகுதிக்கு செல்லாமல் மக்கள்  செல்லும் சாலையில் இன்று அதிகாலை நடந்து வந்து உள்ளது. அதிகாலை வேலையில் நடைப்பயிறசி சென்ற சிலர் யானையை கண்டு ஓட்டம் ‌பிடித்தனர்.   

வனத்துறைக்கு தகவல் கொடுத்து அதிகாரிகள் யானையை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.‌ சரியாக இன்று காலை 6 மணிக்கு தொண்டாமுத்தூர் அரசு கலைக்கல்லூரி எதிரில் உள்ள வஞ்சிமாநகர்‌ பகுதியில் யானை வந்த உள்ளது. அங்கு வசிக்கும் ஆறுமுகம் (75) என்பவர்‌ கடைக்கு செல்ல வீட்டை வீட்டு வெளியே வந்தவர் ரோட்டில் யானை நிற்பதை கண்டு திரும்ப வீட்டிற்கு செல்ல முயன்றார். கண்ணிமைக்கும் நேரத்தில் துதிக்கையில் பிடித்து இழுத்து காலால் மிதித்து ஆறுமுகத்தை கொன்றது. அவர் சத்தம் கேட்டு வெளியே வந்த ஆறுச்சாமி (19) , முத்து (18) ஆகிய இருவரையும் யானை தாக்கியது .‌இதில் இருவரும் காயத்துடன் உயிர் தப்பினர். யானையை கண்ட ஊர் மக்கள் செய்வது அறியாமவல் திகைத்து நின்றனர்.‌ யானையை பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் துரத்தி சென்றனர்.  காயம் அடைந்த இருவரையும் 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பொதுமக்களும் வனத்துறையினரும் யானையை விரட்டினர். பலமுறை போக்கு காட்டிய யானை  அருள் ஜோதி நகர் வழியாக சென்று முத்தி பாளையம்  அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நுழைவாயில் கேட்டை உடைத்து மதில் சுவரை இடித்துத் தள்ளியது.  அதிக கோபத்துடன் காணப்பட்ட யானை ஒரு கட்டத்தில் பிளிறியபடி பொதுமக்களை விரட்டத் துவங்கியது. அட்டுக்கல் வனப்பகுதியில் யானையை விரட்டி சென்று விட்டுள்ளனர். 

கடந்த 20  நாட்களுக்கு முன்பு தொண்டாமுத்தூர் அடுத்த குப்பேபாளையம் பகுதியில் இதேபோன்று அதிகாலை காலை கடன் கழிக்க சென்ற பெண்ணை யானை தாக்கி கொன்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தொண்டாமுத்தூர் பகுதியில் அடுத்தடுத்து யானை தாக்கி உயிர் வலி ஏற்பட்டு வருவது பொதுமக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

-சீனி, போத்தனூர்.

Comments