EAT RIGHT - PUDUKKOTTAI நிகழ்ச்சியைத் துவக்கி வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர்..!

-MMH

புதுக்கோட்டையில் பொதுமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான உணவு கிடைக்கும் பொருட்டு EAT RIGHT PUDUKKOTTAI என்ற நிகழ்ச்சியை மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அமைச்சர் டாக்டர் C.விஜயபாஸ்கர், அவர்கள் துவக்கிவைத்தார். 

கூட்டத்திற்கு உயர்திரு P.உமாமகேஸ்வரி IAS  அவர்கள் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் பொதுமக்கள், உணவு வணிகர்கள் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

இந்தக் கூட்டத்தில் உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை மாவட்ட நியமன அலுவலர் Dr.R.ரமேஷ்பாபு MBBS., அவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இதற்கான  ஏற்பாடுகளை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செய்திருந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-M.சதாம் உசேன், பொன்னமராவதி.

Comments