SBI RuPay JCB பிளாட்டினம் காண்டாக்ட்லெஸ் கார்ட்கள் உலகம் முழுவதும் பயன்படுத்தலாம்!!.

     -MMH

     SBI RuPay JCB பிளாட்டினம் காண்டாக்ட்லெஸ் கார்ட் வைத்திருப்பவர்கள் இனி தங்கள் கார்டுகளை உலகம் முழுவதும் பயன்படுத்தலாம்.

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, இந்திய தேசிய கொடுப்பனவு கார்ப்பரேஷன் (NPCI) மற்றும் ஜப்பானின் ஜே.சி.பி இன்டர்நேஷனல் கோ ஆகியவை இணைந்து "எஸ்பிஐ ரூபே ஜேசிபி பிளாட்டினம் தொடர்பு இல்லாத டெபிட் கார்டு" (SBI RuPay JCB Platinum Contactless Debit Card) அறிமுகப்படுத்தியுள்ளது.

JCB ஒரு பெரிய உலகளாவிய கட்டண பிராண்டாக உள்ள நிலையில் ஜப்பானில் முன்னணி கிரெடிட் கார்டு வழங்குனராகவும் இயங்கி வருகிறது. இந்த கார்டின் மூலம் வாடிக்கையாளர்கள் JCB நெட்வொர்க்கின் கீழ் உலகெங்கிலும் உள்ள ATM-கள் மற்றும் PoS-களில் பரிவர்த்தனை செய்ய முடியும். மேலும் கார்டைப் பயன்படுத்தி JCB-யுடன் கூட்டாண்மையில் உள்ள சர்வதேச இ-காமர்ஸ் வணிகர்களிடமிருந்தும் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யலாம்.

உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் பரிவர்த்தனை செய்வதற்கு அதிகமான இந்திய வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் கட்டண முறைகளைப் பயன்படுத்துவதால், இந்த கார்டு பயன் உள்ளதாக இருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-சுரேந்தர்.

Comments