10 ஆண்டுகளுக்கு பிறகு கண்மாயில் நீர் நிரம்பி மறுகால் செல்வதால் மக்கள் மகிழ்ச்சி!!

     -MMH

பொன்னமராவதி அருகே மைலாப்பூர் ஊராட்சியிலுள்ள  இரட்டை கண்மாய் 10 ஆண்டுகளுக்கு பிறகு நீர் நிரம்பி மறுகால் செல்வதால் அக்கிராம மக்கள் மலர் தூவி வணங்கினர்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் மைலாப்பூர் ஊராட்சியில் உள்ள இரட்டை கண்மாய் பத்தாண்டுகளுக்கு பிறகு நீர் நிரம்பியது. கடந்த சில தினங்களாக பெய்த மழையால் மைலாப்பூரில் உள்ள இரட்டை கம்மாய் நீர் நிரம்பி பத்தாண்டுகளுக்கு பிறகு மறுகால் செல்ல தொடங்கியதால் மைலாப்பூர் கிராம மக்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என ஏராளமானோர் மடையின் அருகே கலிங்கியில் வெளியாகும் நீரில் மலர் தூவி வருண பகவானை வணங்கினர்.

மேலும் அக்கிராம மக்கள் கூறுகையில் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு கண்மாயில் நீர் நிரம்பி மறுகால் செல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறினர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-M.சதாம் உசேன்

Comments