தமிழகத்தில் 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு வரும் 18ஆம் தேதி பள்ளிகள் திறக்க வாய்ப்பு!!

    -MMH 

     தமிழகத்தில் 10,11,12 ஆகிய வகுப்புகளுக்காக வரும் 18ஆம் தேதி பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைனில் படங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது முன்பை விட கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் பள்ளிகள் திறக்க ஏதுவான சூழல் இதுதான் என்று சொல்லப்படுகிறது. இதற்கான முயற்சியை கடந்த நவம்பர் மாதமே அரசு முன்னெடுத்த நிலையில் பெற்றோர்களின் கருத்து கேட்பினால் அந்த முடிவானது கைவிடப்பட்டது.

தற்போது தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மற்றும் பெற்றோர்களுடன் கருத்துக் கேட்புக் கூட்டம் தொடங்கியது.

பொங்கலுக்கு பிறகும் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில் நாளை மாலைக்குள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தி முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் 10,11,12 ஆகிய வகுப்புகளுக்காக வரும் 18ஆம் தேதி பள்ளிகள் திறக்க வாய்ப்பு உள்ளதாக கூறபப்படுகிறது. பொங்கல் விடுமுறைக்கு பின்னர் பள்ளிகளை திறக்க பெரும்பாலான பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படும் நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி, அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

-ஸ்டார் வெங்கட்.

Comments