சென்னை தேனாம்பேட்டையில், காதல் வலையில் சிக்கி இளம்பெண் கர்ப்பம்! குளியல் அறையில் குழந்தை பெற்ற 16 வயது சிறுமி!!
சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி அருகே பச்சிளம் குழந்தையுடன் 3 இளம்பெண்கள் சந்தேகத்துக்கு இடமாக நின்றுகொண்டிருப்பதாக கீழ்ப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசனுக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக அவர் விரைந்து சென்று அவர்களிடம் விசாரணை நடத்தியபோது பரபரப்பு தகவல் கிடைத்தது. அதன் விவரம் வருமாறு:-
மிசோரத்தை சேர்ந்த 16 வயது சிறுமி வேலை தேடி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மகளிர் விடுதியில் தங்கி இருந்தார். அவர் காதல் வலையில் கர்ப்பம் அடைந்திருந்தார். இதை அவர் வெளியில் சொல்லவில்லை. கடந்த வாரம் அந்த சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. குளியறையில் வைத்து பெண் குழந்தை பெற்றெடுத்தார். தொப்புள் கொடியை யூடியூப் மூலம் பார்த்து அறுத்துள்ளார்.
பின்னர் அந்த குழந்தையை கொன்று விடலாமா? அல்லது சிவன் கோவிலில் வைத்துவிடலாமா? என்று எண்ணி உள்ளார். இதுதொடர்பாக சென்னை அயனாவரத்தில் தனக்கு தெரிந்த கல்லூரி மாணவியிடம் யோசனை கேட்டார். அதற்கு அவர், அந்த குழந்தையை கொல்வது பாவம் என்று கூறி தனக்கு தெரிந்த மாணவியிடம் குழந்தையை ஒப்படைத்துள்ளார். அந்த மாணவி, தனது பெற்றொருக்கு தெரியாமல் வீட்டில் உள்ள தனது அறையில் 2 நாட்கள் குழந்தையை வைத்து பால்பாக்கெட்டை ஊட்டி ரகசியமாக வளர்த்துள்ளார். பின்னர் வீட்டுக்கு பயந்து கீழ்ப்பாக்கம் பகுதியில் தனக்கு தெரிந்த பெண்ணிடம் குழந்தையை வளர்க்க சொல்லி கொடுக்க முயன்றபோது போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
அந்த 2 மாணவிகளும் குழந்தையை கொல்ல கூடாது என்ற மனிதாபிமானத்தில்தான் உதவி செய்தோம் என்றனர். இதையடுத்து பச்சிளம் குழந்தையை, குழந்தைகள் காப்பகத்தில் இன்ஸ்பெக்டர் முருகேசன் ஒப்படைத்தார். குழந்தையை பெற்றெடுத்த சிறுமி, தேனாம்பேட்டை விடுதியை காலி செய்துவிட்டு தலைமறைவாகி விட்டார். சினிமாவை மிஞ்சும் அளவுக்கு சென்னையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-V.ருக்மாங்கதன்,சென்னை.
Comments