கொப்பரை கிலோவுக்கு 2.10 ரூபாய் விலை சரிந்தது!!

 -MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்  விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் தலைமையில் ஏலம் நடந்தது. இதில் முதல் தரக் கொப்பரை 220 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு 110 முதல்  127.25 ரூபாய் விலை கிடைத்தது. இரண்டாம் தரக் கொப்பரை 201 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு 70 முதல்  90.50 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. மொத்தம் 421 கொப்பரை மூட்டைகளை 78 விவசாயிகள் கொண்டு வந்தனர்.

10 வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர். கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில்  இந்த வாரம் கொப்பரை கிலோவுக்கு 2.10 ரூபாய் விலை சரிந்தது. கொப்பரை வரத்தும் 92 மூட்டைகள் குறைந்தது என தகவல் தெரிவித்துள்ளார்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி கிழக்கு.

Comments