அதிர்ஷ்டக்கல் மோசடி! 22 பேர் அதிரடி கைது!

 

-MMH

      பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போலியான நவரத்தினக்கல் விற்க முயற்சி செய்த மோசடி கும்பலை போலீசார் சுற்றி வளைத்தனர், 22 பேர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தனிப்படை:

கோவை மாவட்ட கண்காணிப்பாளர் ரா. அருளரசு உத்தரவின் பெயரில் பொள்ளாச்சி நகர்ப்புற பகுதியில் விடுதிகள் மற்றும் சோதனைச் சாவடிகளில் குற்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுத்தும் தனிப்படை அமைத்து கண்காணித்து வருகின்றனர்,

கள்ள நோட்டு:

இந்நிலையில் பொள்ளாச்சி பெருமாள் செட்டி வீதியில் செல்போன் கடை நடத்தி வரும் ரியாஸ் கடைக்கு வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மூக்கையா, ராஜ்குமார், மந்திரி மூவரும் ரியாஸ் இடம் மத்திய அரசால் தடைசெய்யப்பட்ட செல்லா நோட்டு ரூபாய் 500 மற்றும் 1000 தந்தால் பத்து மடங்கு புதிய நோட்டு தருவதாகவும் தங்களுக்கு வங்கிகளில் மேலாளர் நல்ல பழக்கம் உள்ளார் என ரியாஸ் இடம் தெரிவித்துள்ளனர், 

பின் மூவரும் கேரளாவைச் சேர்ந்த நபர்களிடம் செல்போனில் பேசி பொள்ளாச்சி அடுத்து உள்ள குஞ்சிபாளையம் சுடுகாடு அருகே ரியாஸ் வரச்சொல்லி ரூபாய் 5 லட்சம் தரவேண்டும் பின் புதிய நோட்டு தருவதாக கூறியுள்ளனர் இதற்கு ரியாஸ் நீங்கள் முதலில் காமிக்க வேண்டும் என தெரிவித்ததன் பேரில் ரியாஸ் இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் ரியாஸ் ஐந்து பேரை பிடித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வசம் ஒப்படைத்தனர், இச்சம்பவம் குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வைரம் தலைமையில் தனி படையினர் விசாரணை மேற்கொண்டதில் விசாரணையில் 

போலி நவரத்தினக் கல்:

இந்த மோசடி கும்பல் நவரத்தினக் கல், அதிர்ஷ்ட கல் கற்களை வைத்தால் வீட்டில் அதிர்ஷ்டம் பெருகும் எனவும் போலியான தங்க பிஸ்கட் என பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது, பொள்ளாச்சி பாலக்காடு ரோடு நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பின் புறம் சந்தேகத்துக்கிடமான கேரளாவைச் சேர்ந்த நபர்கள் இருப்பதாக ரகசிய தகவல் அடுத்து போலீசார் 18 பேரை பிடித்து விசாரணை செய்தனர்,

விசாரணையில் கேரளாவைச் சேர்ந்த நவீன் ஆனந், நூறு தீன், சுனில், ரஜீஸ் அஜீஸ் பட்டேல், சுதீஸ், பைசல், அனில்குமார், சாகத், தினேஷ், இசாக், சந்திரன், வினோத், சந்தோஷ், சோஜன், அனூப், விஷ்ணு / அக்சோ, பாசில் ஆகியோரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து வந்த விசாரித்ததில் ஏற்கனவே ரியாஸ்யை ஏமாற்ற முயற்சி செய்தது இக்கும்பல் என தெரியவந்தது, மோசடி கும்பல் பயன்படுத்திய 3 கார்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 பேர் மற்றும் கேரளாவை சேர்ந்த 18 பேர் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

-Ln. இந்திராதேவி முருகேசன், சோலை. ஜெய்க்குமார்.

Comments