சென்னையில் தங்கி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த இலங்கையை சேர்ந்த 2 பேர் கைது!!
சென்னையில் பல ஆண்டுகளாக தங்கியிருந்து, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட வந்த இலங்கையை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இலங்கை நாட்டவர்களான இவர்கள் இருவரும் தங்கள் அடையாளத்தை மறைத்து, பாஸ்போர்ட் இல்லாமல் பல ஆண்டுகளாக சென்னையில் வசித்து வந்தது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இதில் 10 ஆண்டுகளாக சென்னையில் வசித்து வரும் எம்எம்எம் நவாசை பிடிக்க, இலங்கை அரசு ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்திருப்பதும் தற்போது தெரியவந்துள்ளது.
இதனிடையே, கடந்த 15ஆம் தேதி, செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில், ஒரு குடோனில் 45 கிலோ Ephedrine போதைப்பொருளை பறிமுதல் செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த காஜா மைதீன், சென்னையை சேர்ந்த காதர்மைதீன் ஆகிய இருவரை கைது செய்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-V.ருக்மாங்கதன்,சென்னை.
Comments