கோவை மாவட்ட அரிமா சங்கம் 324 பி1 ரீஜியன் டி மண்டல மாநாடு கோவையில் நடைபெற்றது!!

     -MMH

கோவை மாவட்ட அரிமா சங்கம் 324 பி1 ரீஜியன் டி மண்டல மாநாடு கோவையில் நடைபெற்றது. இதில் பிரபல நடிகரும்,எழுத்தாளரும் ஆன பேராசிரியர் ஞானசம்பந்தன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கோவையில் அரிமா சங்கம் 324 பி.1 ன்  செந்தில்  மண்டல மாநாடு கோவை உக்கடம் பகுதியில் உள்ள க்ரீன் பிக்சல் வளாகத்தில் நடைபெற்றது..ஸ்ரீ 2021 எனும் தலைப்பில் நடைபெற்ற இதில் ரிஜீன் டி யின் தலைவர் செந்தில் குமார் தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆளுநர் கருணாநிதி,கலந்து கொண்ட இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னால் சர்வதேச இயக்குனர் ராமகிருஷ்ண மூர்த்தி கலந்து கொண்டார்.

விழாவில்  பிரபல பேச்சாளரும்,பேராசியர்,நடிகருமான  ஞானசம்பந்தன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.தமிழின் சிறப்பை நகைச்சுவையுடன் அவர் பேசியதை கூடியிருந்தவர்கள் ரசித்து ஆராவாரம் செய்தனர்.முன்னதாக விழாவில் கல்வி உதவி தொகை,நன்கொடை மற்றும் நலத்திட்ட  உதவிகள் வழங்கப்பட்டது.

இதில், முதல் துணை ஆளுநர் நடராஜன் இரண்டாம் துணை ஆளுநர் ராம்குமார் அரிமா சங்க செய்தி தொடர்பாளர் செந்தில் குமார், முன்னாள் ஆளுநர் சண்முகம் மற்றும் அரிமா சங்க பல்வேறு நிலை நிர்வாகிகள் குருநாதன், சுவாமிநாதன், நீலகண்டன், நித்யானந்தம், பாலசுப்ரமணியன், சீதாராமன், ராஜ்மோகன், பாஸ்கர், மதிவாணன், ராஜகோபால், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

- சீனி,போத்தனூர்.

Comments