புத்தாண்டு நாளில் 3.6 லட்சம் குழந்தைகள் உலகம் முழுவதும் பிறந்திருக்கலாம்! - யுனிசெப் நிறுவனம்.

     -MMH 

உலகம் முழுவதும் புத்தாண்டில் 3.6 லட்சம் குழந்தைகள் பிறந்தன: இந்தியாவில் எவ்வளவு தெரியுமா?

உலகளவில் குழந்தை பிறப்பு எண்ணிக்கையை 10 நாடுகளை அடிப்படையாகக் கொண்டு கணித்து வருகிறது யுனிசெப் நிறுவனம். அந்த நிறுவனத்தின் அறிவிப்பின் படி நேற்று புத்தாண்டு நாளில் 3.6 லட்சம் குழந்தைகள் உலகம் முழுவதும் பிறந்திருக்கலாம் என கணித்துள்ளது.  

மொத்தத்தில், 2021 ஆம் ஆண்டில் 140 மில்லியன் குழந்தைகள் பிறக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களின் சராசரி ஆயுட்காலம் 84 ஆண்டுகள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக யுனிசெப் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2021 ஜனவரி 1-ம் தேதி, புத்தாண்டு தினத்தன்று இந்தியாவில் 59 ஆயிரத்து 995 குழந்தைகள் பிறந்துள்ளன என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 59,995 குழந்தைகள்

சீனாவில் 35,615 குழந்தைகள்

நைஜிரியாவில் 21,439 குழந்தைகள்

பாகிஸ்தானில் 14,161 குழந்தைகள்,

எத்யோப்பியாவில் 12,006 குழந்தைகள்

அமெரிக்காவில் 10,312 குழந்தைகள்

எகிப்தில் 9,455 குழந்தைகள்

வங்காள தேசத்தில்  9,236 குழந்தைகள்,

காங்கோ குடியரசில் 8,640 குழந்தைகள் பிறந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் புத்தாண்டு தினத்தன்று பிறந்த குழந்தைகள் குறித்து யுனிசெஃப் அறிக்கை வெளியிட்டுக் கொண்டாடி வருகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-V.ருக்மாங்கதன், சென்னை.

Comments