குமுளி அருகே சிறுத்தயை வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட 5பேர் கைது!!

     -MMH

கம்பம்: தேனி மாவட்டம் குமுளி அருகேயுள்ள இடுக்கி மாவட்டம் மாங்குளம் வனப்பகுதியில் சிறுத்தையை வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட 5 பேரை வனத்துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மாங்குளம் அருகே ஒரு கும்பல் வன விலங்குகளை வேட்டையாடுவதாக மாங்குளம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் மாங்குளம் வனக் கோட்ட அலுவலா் பி.சுகைப் தலைமையில் வனத்துறையினா் ரோந்து சென்றனா்.

அப்போது முனிப்பாறை என்ற இடம் அருகே பி.கே.வினோத் (45), என்பவரது வீட்டில், அவருடன் வி.பி.குரியாகோஷ் (74), சி.எஸ்.பினு (50), குஞ்சப்பன்((54), வின்சென்ட் (50) ஆகிய 5 பேரும் சிறுத்தையைக் கொன்று, அதன் இறைச்சியை சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனா். அவா்களைச் சுற்றி வளைத்த வனத்துறையினா், சிறுத்தையின் இறைச்சி சுமாா் 10 கிலோ, தோல், நகங்கள், பற்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து வன அலுவலா் ஒருவா் கூறியது: ஆறு வயதுள்ள ஆண் சிறுத்தையை இக்கும்பல் வேட்டையாடியுள்ளது. வனப்பகுதியை ஒட்டியுள்ள தனியாா் நிலத்தில், வினோத் வன விலங்குகளை பிடிக்க வைத்த பொறியில், சிறுத்தை சிக்கிக்கொண்டுள்ளது. இவா்கள் வன விலங்குகளை தொடா்ந்து வேட்டையாடி வந்துள்ளனா். சிறுத்தையின் தோல், நகம், பற்களை விற்கவும் திட்டமிட்டிருந்தனா் என்றாா்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஆசிக்,தேனி.

Comments