கோவையில் கொரோனா மொத்த பலி எண்ணிக்கை 654 ஆக உயர்ந்தது!!

-MMH

கோவையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் என்னிக்கை அதிகரிப்பு. கோவையில், நேற்று 90 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நேற்று புதிதாக, 82 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 

மொத்த பாதிப்பு, 52 ஆயிரத்து 418 ஆக உயர்ந்தது.கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, 68 வயது மூதாட்டி, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மொத்த பலி எண்ணிக்கை 654 ஆக உயர்ந்தது.அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த, 97 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை, 50 ஆயிரத்து 966 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 798 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

-அருண்குமார் கோவை மேற்கு.

Comments