பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் இன்று விடுதலையா? ஆளுநர் முதல்வர் சந்திப்பு!

     -MMH

     ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்தார்.

30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரையும் விடுவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்த நிலையில் சமீபத்தில் உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் முடிவெடுக்கலாம் என தெரிவித்தது.

ஒரு வார காலத்தில் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்றும் அவகாசம் கொடுத்திருந்தது. நேற்றோடு ஒரு வாரம் கால அவகாசம் முடிவடைந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்தித்தார்.

ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார். அவர் மறைவை தொடர்ந்து சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் ஆளுநரை சந்தித்த முதல்வர் ஏழு பேர் விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என ஆளுநரை கேட்டுக் கொண்டார். மேலும் இது தொடர்பான கோரிக்கை அடங்கிய கடிதத்தை அவர் ஆளுநரிடம் வழங்கினார்.

இதனையடுத்து இன்றோ, நாளையோ ஏழு பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-ராயல் ஹமீது.

Comments