பசுமை வீடுகள் - 810 வீடுகள் கட்ட இலக்கு!!

      -MMH
      கோவை மாவட்டத்தில், பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ், 2020 - 2021 ம் ஆண்டுக்கு, 810 வீடுகள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சொந்தமாக வீடோ, அரசின் வீடு கட்டுவதற்கான பிற மானியங்கள் பெற்று இருந்தாலோ, விண்ணப்பிக்க இயலாது. 

மாநில அரசு, 100 சதவீத நிதியாக 2.10 லட்சம் ரூபாய் வீதம்இதற்காக வழங்குகிறது. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு இத்தொகை, 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மாவட்ட ஊரக திட்ட முகமை இயக்குனர் (பொறுப்பு) ரூபன்சங்கர் ராஜாவிடம் கேட்டபோது, '' கோவையில் நடப்பாண்டில், 810 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் துவக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக, தொண்டாமுத்துார் பகுதிக்கு 209 வீடுகளும், காரமடையில், 197 வீடுகள் உட்பட, 12 வட்டாரங்களிலும் இலக்கு நிர்ணயித்துப் பணிகள் நடந்து வருகின்றன,'' என்றார்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப், தொண்டாமுத்தூர். 

Comments