போத்தனூரில் முதல்வர்! - மகிழ்ச்சியில் மக்கள்...!!!

     -MMH

     கோவை மாவட்டம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்றும், நாளையும் கோவையில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

இன்று அவினாசி சாலை, மேம்பாலம், மரக்கடை, வேணுகோபால் ரோடு, ராஜவீதி, செல்வபுரம், குனியமுத்தூர் ஆகிய இடங்களில் மக்கள் மத்தியில் பேசிவிட்டு சங்கமம் திருமண மண்டபத்தில் இஸ்லாமியர்களுடன் கலந்துரையாடினார்.

பின்பு போத்தனூர் சாரதாமில் ரோடு பகுதியில் சென்ற முதல்வர் அங்கு முதல்வர் வருகைக்காக குழுமியிருந்த ஏராளமான மக்களிடம்  பிரச்சாரம் மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து முதல்வரின் பிரச்சார பயணமானது சுந்தரபுரம், மதுக்கரை மார்க்கெட், கிணத்துக்கடவு ஆகிய இடங்களிலும் முதல்வர் பிரசாரம் மேற்கொள்கிறார். பொள்ளாச்சி காந்தி சிலை, திருவள்ளுவர் திடல், ஜமீன் ஊத்துக்குளி, ஆணைமலை ரவுண்டானா பகுதியில் முதல்வர் பழனிசாமி பேசுகிறார்.

மாலையில் என்.எம்.சுங்கம் சந்திப்பு, சுல்தான்பேட்டை, சூலூர் நால்ரோடு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு அ.தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

-ஈஷா,கோவை.

Comments