குப்பைகள் அகற்ற ஆனைமலை மக்கள் கோரிக்கை..!!

     -MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை பேரூராட்சியில் பல்வேறு  இடத்தில் இருந்து சேகரிக்கும் குப்பைகள் விவேகானந்த நகரில் குப்பைகளை கொட்டி செல்வதால் அப்பகுதி மக்களுக்கு பெரும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

கொட்டப்படும் குப்பைகளால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். பேரூராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் அப்புறப்படுத்த முயற்சிக்கவில்லை.குப்பைகளை அப்புறப்படுத்தி தரம் பிரித்து மறுசுழற்சி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனனர்.

குறிப்பாக குப்பைகளை குப்பை தொட்டியில் இடாமல் சாலையின் அருகில் இட்டு செல்வதும், பொட்டலாமா கட்டி இட்டுசெல்வது காற்றில் பறந்து வாகன ஓட்டிகளுக்கு இன்னும் ஒரு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன்,

பொள்ளாச்சி கிழக்கு.

Comments