தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு மாணவர்கள் வரவேற்பு!!

     -MMH

     கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்த நிலையில் பள்ளிகள் திறக்கப்படுமா என்பதே கேள்விக்குறியானது. 

இதையடுத்து 2020-21-ம் கல்வியாண்டுக்கான பாடங்கள் ஆன்-லைன் வழியாகவும், கல்வி தொலைக்காட்சி மற்றும் யூ-டியூப் மூலமாகவும் மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வந்தன. இந்த சூழ்நிலையில் கடந்த வாரம் பெற்றோர்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. அதன்  அடிப்படையில் தமிழக அரசு ஜனவரி மாதம் 19ம் தேதி  பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்தது. தமிழக அரசின் அறிவிப்பின் படி இன்று 10 மாத காலத்துக்கு பிறகு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு  பள்ளிகள் திறக்கப்பட்டது. 

நேற்று தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளை சுத்தம் செய்யும்  பணிகளில் சுகாதார பணியாளர்கள்  ஈடுபட்டனர் தனியார் பள்ளிகளில்  நிர்வாகம் சார்பில் சுத்தம் செய்யப் பட்டது.  மேலும் ஆசிரியர்களுக்கு  கொரோனா விழிப்புணர்வு மற்றும் அதன் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கப்பட்டது. 

அதனடிப்படையில் இன்று காலை முதலே பள்ளிகளில்  உடல்சூடு கண்டறியும் கருவி மூலம் உடல் வெப்பம் பரிசோதனை நடத்தப்பட்டது பின்னர் அவர்களுக்கு கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிகளில் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பள்ளிகளில் மாணவர்கள் போதுமான இடைவெளி விட்டு அமரவேண்டும் என்ற கட்டுப்பாடும் வகுக்கப்பட்டு உள்ளது . இதனால் மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு ஆர்வமுடன் வந்தனர். மாணவ-மாணவிகளை பள்ளி நுழைவு வாயிலில் பள்ளி ஆசிரியர்கள் வரவேற்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-V.ராஜசேகரன்,  தஞ்சாவூர்.

Comments