ரசிகர்கள் என்னை மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம்!! - ரஜினிகாந்த் உருக்கமான வேண்டுகோள்!!
நடிகர் ரஜினிகாந்த் சில நாட்களுக்கு முன்பாக அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும் டிசம்பர் மாத இறுதியில் கட்சியின் பெயர் சின்னங்கள் அறிவிக்க இருப்பதாகவும் அறிவித்தார். ஆனால் அதற்குள் அவரது உடல்நிலை மிகவும் பாதிப்புக்கு உள்ளானது ,அதனை தொடர்ந்து அவர் தீவிர அரசியலுக்கு வர தன் உடல்நிலை இடம் கொடுக்க வில்லை என்றும் ரசிகர்கள் தனது முடிவை ஏற்ப்பார்கள் என்றும் உருக்கமாக தெரிவித்திருந்தார்.
மேலும் அவர் தன்னை நம்பி வந்தவர்களை ஏமாற்ற விரும்பவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.இந்த சூழ்நிலையில் இன்று அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தனது ரசிகர்கள் தன்னை அரசியலுக்கு வருவதற்கு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று மீண்டும் கோரிக்கை வைத்து தனியாக கூட்டம் நடத்தி இருப்பதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டகளுடன் சேர்ந்து ஒரு சிலர் கூட்டம் நடத்தி இருப்பதற்கு வருத்தம் தெரிவித்து இது போன்ற செயல்களை செய்து மேலும் மேலும் தன்னை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி வேண்டாம் என்று கோரிக்கை வைத்துள்ளார். அந்த அறிக்கையில் தான் ஏன் அரசியலுக்கு வர இயலவில்லை என்பதற்கான காரணத்தை ஏற்கனவே தெரிவித்து விட்டதையும் அவர் தெரிவித்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திக்காக
-V.இராஜசேகரன்,தஞ்சாவூர்.
Comments