தாம்பரம் மின்சார ரயிலில் மதுபோதையில் தூங்கிய பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை!! - இருவர் கைது!!

 

     -MMH

தற்காலிக ஊழியர்கள் சுரேஷ்(30), அப்துல் அஜிஸ் (30) ஆகியஇருவரும் மின்சார ரயிலில் இருந்த பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

தாம்பரத்தில் மின்சார ரயில் மதுபோதையில் துங்கிய பெண்ணை நள்ளிரவில் பராமரிப்பு பணயில் இருந்த தற்காலிக ஊழியர்கள் இருவர் பாலியல் வன்கொடுமை செய்ததை தொடர்ந்து அவர்களை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.

செங்கல்பட்டு அடுத்த பரனுரை சேர்ந்த கூலி வேலை செய்பவர் 40 வயதுடைய பெண். இவருக்கு குடிபோதை பழக்கம் இருந்து உள்ளது. நேற்று இரவு பல்லாவரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயிலில் பரனுர் செல்ல ஏறி உள்ளார். அந்த பெண் மதுபோதையில் இருந்ததால் அயர்ந்து தூங்கி உள்ளார்.

இதனால் அந்த மின்சார ரயில் செங்கல்பட்டு வரை சென்று மீண்டும் கடற்கரைக்கு வந்து அதன் பின்னர் தாம்பரம் வந்தடைந்துள்ளது. அதன்பின் பராமரிப்பு செய்யும் பணிக்காக தாம்பரம் மின்சார ரயில் பராமரிப்பு நிலையத்தில் நிறுத்திய நிலையில் ரயிலின் ஓட்டுனர் சென்றுவிட்டார்.

   

நள்ளிரவு ஒருமணியளவில் அங்கு வந்த தற்காலிக ஊழியர்கள் சுரேஷ்(30), அப்துல் அஜிஸ் (30) ஆகியஇருவரும் மின்சார ரயிலில் இருந்த பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தை வெளியே சொல்லக்கூடாது என மிரட்டி அனுப்பியுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட அந்த பெண் தாம்பரம் ரயில்வே காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சுரேஷ், அப்துல் அஜிஸ் ஆகிய இருவரையும் கைது செய்து தாம்பரம் குற்றவியல் நடுவர் முன்பாக ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-V.ருக்மாங்கதன்,சென்னை.

Comments