வால்பாறை அக்காமலை எஸ்டேட் பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானைகள்! - பொதுமக்கள் அவதி!!

     -MMH

     கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை அக்காமலை எஸ்டேட் பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானைகளை பொதுமக்கள் காட்டுக்குள் விரட்டும் பொழுது மக்களை விரட்டியும் மிரட்டியும் வருகிறது.

இதனால் எஸ்டேட் தொழிலாளர்கள் மிகுந்த பயத்துடன் உள்ளனர். வனத்துறை அதிகாரிகள் எஸ்டேட் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு யானைகளை வனத்துக்குள் விரட்டி எஸ்டேட் தொழிலாளர்களை பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என்கிறார்கள் எஸ்டேட் தொழிலாளர்கள் 

சில வாரங்களுக்கு முன்பு காட்டு யானை தாக்கி ஒரு பெண் பலியானார். நேற்று முன்தினம் ஒருவரை துரத்திக் கொண்டு வந்தது அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

-M.சுரேஷ் குமார்,  கோவை தெற்கு.

Comments