திருப்பூர் கடைவீதி களை கட்டவில்லை!!!

 

-MMH

திருப்பூர், மழை நீர் வடிகால் கட்டுமான பணி நடப்பதால், பொங்கல் பண்டிகைக்கு பொருள் வாங்க யாரும் வராததால், புது மார்க்கெட் வீதி வெறிச்சோடியது.திருப்பூரை பொறுத்தவரை, தீபாவளியும், பொங்கல் பண்டிகையும் களை கட்டும். பொருட்கள் வாங்கவும் கடைவீதிகளில் பண்டிகைக்கு சில நாட்கள் முன்னதாகவே மக்கள் கூட்டம் காணப்படும்.

தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்துக்கு பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் கடை வீதிகளில் காணப்படும். அவ்வகையில் திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட், புது மார்க்கெட் வீதி பகுதிகளில் உள்ள கடைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும்.ஆனால், பொங்கலுக்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், பொருட்கள் வாங்க வரும் கூட்டம் புது மார்க்கெட் வீதியில் இல்லாமல், கடைகள் வெறிச்சோடி உள்ளது.குறிப்பாக, புது மார்க்கெட் வீதியில் இரு புறமும் மழை நீர் வடிகால் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதனால் இந்த பகுதிக்கு எந்த வழியாகவும் வாகனங்கள் வர முடியாத நிலை உள்ளது. இதனால், கூட மக்கள் வராததற்கு காரணமாக இருக்கலாம் என, கடைக்காரர்கள் கூறுகின்றனர். எனவே, ஆமை வேகத்தில் நடக்கும் கால்வாய் கட்டுமான பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும்.

நாளையவரலாறு செய்திக்காக, 

-முஹம்மதுஹனீப் திருப்பூர்.

Comments