சசிகலா இன்று விடுதலையாகிறார்.!!

-MMH
பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து சசிகலா இன்று பிற்பகலுக்குள் அதிகாரப்பூர்வமாக விடுதலை செய்யப்படுகிறார். சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் நேற்று சிறை அதிகாரிகளை சந்தித்து சசிகலா விடுதலைக்கான ஆவணங்களை ஒப்படைத்து சிறை விதிகளை பூர்த்தி செய்தார். சசிகலா இன்று பிற்பகலுக்குள் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-அருண்குமார் கோவை மேற்கு.

Comments