சாலை விபத்தில் மரணமடைந்த அமமுக பிரமுகர் இறுதி அஞ்சலிக்கு அமமுக மாநில, மாவட்ட நிர்வாகிகள் வருகை!

     -MMH

     சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தாலுகா குன்னத்தூர் ஊராட்சி மன்றத் தலைவரும், அமமுக சிவகங்கை மாவட்ட மீனவர் அணி செயலாளருமான சிலம்புச்செல்வன் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடந்த கார் விபத்தில் சம்பவ  இடத்திலேயே நேற்று பலியானார்.

சிலம்புச்செல்வனின் இறுதி அஞ்சலி நிகழ்வு இன்று குன்னத்தூரில் நடைபெற்றது. அதில், அமமுக தலைமை நிலைய செயலாளர் கே.கே.உமாதேவன் முன்னாள் எம்.எல்ஏ வும், அமமுக அம்மா பேரவை செயலாளர் எஸ்.மாரியப்பன் கென்னடி முன்னாள் எம்எல்ஏவும் மற்றும் சிவகங்கை மாவட்டச் செயலாளர் தேர்போகி பாண்டி ஆகியோர் சிலம்புச்செல்வன் இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி குடுப்பத்தார்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.மேலும் அமமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் இறுதி அஞ்சலியில் கலந்துகொண்டனர்.

- அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments