வெள்ளையர்களுக்கு வரிகட்ட மறுத்த மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தினம் இன்று..!!

-MMH

ஆங்கிலேயே ஆட்சியின் கீழ் இந்திய கட்டுண்டு இருந்த சமயங்களில் நமது உரிமைக்காவும் மக்களின் விடுத்தலைக்காகவும் போராடிய பலருள் மிகவும் முக்கியமானவர் மாவீரன் வீரபாண்டிய கட்ட பொம்மன் .

ஜனவரி 3 , 1760 அன்று ஆறுமுகத்தம்மாள் திக்குவிசய கட்டபொம்மு தம்பதியருக்கு பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன் .பிப்ரவரி 2, 1790 அன்று 47 வது பாளையக்காரராக பொறுப்பு ஏற்றுக்கொண்டவர். அப்போது அவருக்கு வயது முப்பது ஆகும். வீரபாண்டிய கட்ட பொம்மனுக்கு, குமாரசாமி என்ற ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும் ஈசுவர வடிவு துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். இவரது துணைவியார் சக்கம்மாள். இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை. இவர் 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார்.

தான் வாழும் தன் தாய் நாட்டில் மக்கள் தொழில் செய்யவும்,தங்கள் வாழ்க்கையை வாழவும் ஆங்கிலேயருக்கு வரிகட்ட வேண்டிய சூழல் ஏற்பட்ட போது ஆங்கிலேயருக்கு அடிபணிந்து கப்பம் கட்ட மறுத்த முதல் இந்தியர் இவர் என்ற பெருமையை உடையவர்.

உயிரே போனாலும் ஆங்கிலேயர்க்கு வரிகட்ட மறுத்து விடுதலை போராட்டத்திற்கு வித்திட்டவர் என்று சொன்னால் அது மிகை ஆகாது . இந்தியாவே ஆங்கிலேயரால் கட்டுண்டு இருக்கும் அச்சமயத்திலும் அச்சம் தவிர்த்து அன்றே அந்நிய செலவானிகளுக்கு வரிகட்ட மறுத்த அவரது வீரம் இன்று மக்கள் ஆட்சியில் சுதந்திரமாக வாழ்ந்து கொண்டு இருக்கும் நமக்கு ஒரு பாடமாக அமைந்திருப்பது காலத்தின் சிறப்பு. வாழ்க கட்ட பொம்மன்  வீரம்.ஆண்டுகள் பல கடந்தும் நம் மனதில் வாழும் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த தினம் இன்று.. .!!

நாளைய வரலாறு சிறப்பு செய்திகளுக்காக,

-V.ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி.Comments