பொள்ளாச்சி அருகே திமுக எம்பி கனிமொழியை தடுத்து நிறுத்தியதா... காவல்துறை..?


-MMH

பொள்ளாச்சி பாலியல் பிரச்சனையில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி திமுக சார்பில் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பொள்ளாச்சி காந்தி சிலை அருகே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

இந்நிகழ்ச்சியில் முக்கிய தலைவர்களும் ஏராளமான கட்சித் தொண்டர்களும் காந்தி சிலை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர் இந்நிலையில் முள்ளிப்பாடி அருகே திமுக மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி அவர்களை கூட்டத்திற்கு கலந்து கொள்ள விடாமல் தடுத்ததாக புகார் வந்ததை அடுத்து பொள்ளாச்சியில் சிறிது நேரம் சலசலப்பும் பரபரப்பும் காணப்பட்டது.

இதனை அடுத்து கனிமொழியே அங்கிருந்து போலீசார் கூட்டத்திற்கு வர அனுமதி அளித்ததை அடுத்து தொண்டர்கள் அமைதி காத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-சுரேஷ்குமார் கோவை தெற்கு.

Comments