விவசாயிகளுக்கு எதிரான போக்கை கையாண்டு வரும் பாஜக அரசை கண்டித்து எஸ்டிபிஐ போராட்டம்!!

-MMH

விவசாயிகளின் விரோதி மோடி அரசை கண்டித்து காரைக்குடியில் ஐந்து விளக்கில் எஸ்டிபிஐ கட்சி சார்பாக 31.12.2020 இரவு 9 மணிக்கு விவசாயிகளுக்கு ஆதரவாக மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் எஸ்டிபிஐ கட்சி சார்பாக நடைபெற்றது.

நகரத் தலைவர் கமருதீன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் அப்துல் இப்ராஹிம், நகர வர்த்தக அணித் தலைவர் சுகைப், நகர துணைத்தலைவர் கலீல் ரஹ்மான் முன்னிலை வகித்தனர். இக்ரம்ஜாவித், நஜ்முதீன் கண்டன கோஷமிட்டனர்.

இறுதியாக நகரச் செயலாளர் பைரோஸ் ஆலம் நன்றி கூறினார். இதில் எஸ்டிபிஐ கட்சி செயல் வீரர்கள் பொதுமக்கள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

-ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Comments