நெற்குப்பையில் ஏறு தழுவும் விழா!! ஏராளமான காளைகள் பங்கேற்பு! பொதுமக்கள் உற்சாகம்!

      -MMH

     சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பையில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு ஏறு தழுவும் நிகழ்வு நடைபெற்றது. 

இந்நிகழ்வில் நெற்குப்பை சிவன்கோயில் முன்பு பொங்கலிட்டு, பாரம்பரிய முறைப்படி ஊர் பொதுமக்கள் ஊர்வலமாக ஜவுளிகள் கொண்டு வந்து தந்து கோவில் காளைக்கு மரியாதை செலுத்தி முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது.

சுற்று வட்டாரங்களிலிருந்து 200க்கும் மேற்பட்ட காளைகள் மாட்டுபொங்கலை முன்னிட்டு ஏர்தழுவுதல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டன. நெற்குப்பையில் மூன்று இடங்களில் மஞ்சுவிரட்டு மாடுகள் அவிழ்த்துவிடப்படும்.

முதலில் ராஜ வீதியில் வரிசையாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதன் பின்னர் கீழத்தெருவில் மூன்று வீதிகளில் மஞ்சுவிரட்டு காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அதன் பின்னர் மேலத்தெருவில் மஞ்சுவிரட்டு மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன.

தொடர் மழை காரணமாக வீதிகள் முழுவதும் சேறும் சகதிகளையும் இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் பொதுமக்களும் மாடுபிடி வீரர்களும் ஆர்வமுடன் ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் ஒரு சிலருக்கு லேசான சிராய்ப்பு காயங்கள் மட்டும் ஏற்பட்டன.

-அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments