மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் குடியரசு தின விழாவில் ரத்து!!

     -MMH

ஜனவரி. 26- 72 -ஆவது குடியரசு தின விழா கோவை வ.உ.சி மைதானத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாவட்ட கலெக்டர் ராசாமணி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 

ஒவ்வொரு வருடமும் குடியரசு தின விழா மற்றும் சுதந்திர தின நிகழ்ச்சிகளில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் உடைய தேசப்பற்றை வலியுறுத்தக் கூடிய பாடல்களுக்கு நடனமாடி பாடல் மூலமாக தேசிய ஒற்றுமையை வெளிப்படுத்துவர். ஆனால் இந்த ஆண்டு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த காரணத்தினாலும் மாணவ மாணவிகள் உடைய பாதுகாப்பை கருதி இந்த ஆண்டு கலை நிகழ்ச்சிகள் மற்றும் மாணவிகள் தேசபற்று நாடகங்கள் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

வீட்டு மாவட்ட நிர்வாகம் கூறும் போது பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் உடைய பாதுகாப்பு கருதியே ரத்து செய்யப்பட்டதாக கூறினர்.

- சீனி,போத்தனூர்.

Comments