மன்னார்குடியில் மது போதையால் மல்லாக்கக் கவிழ்ந்த லாரி!

 

-MMH

தஞ்சாவூர் - மன்னார்குடி சாலையில் அமைந்துள்ள பிபி திருமண மஹாலின் அருகில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது.  அப்பொழுது தஞ்சாவூரிலிருந்து மிக வேகமாக வந்த லாரி ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த காரின் பின்புறம் மோதி தலைகீழாக கவிழ்ந்தது.

லாரி மோதிய வேகத்தில் கார் முன்புறம் இருந்த பன மரத்தின் மீது மோதி முழுவதுமாக சேதம் அடைந்தது. பயணிகள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் இல்லை. இதனால் அந்த சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

லாரி டிரைவர் அளவுக்கதிகமாக மதுவை அருந்தி லாரியை ஓட்டி வந்ததே இந்த விபத்திற்கு காரணம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

மது - குடிகாரர்களுக்கு மட்டுமல்ல, பிறருக்கும் கேடே!

-ரைட் ரபிக், திருவாரூர்.

Comments