சிங்கம்புணரியில் செயிண்ட் ஜோசப் மகளிர் கல்லூரியில் சாலை பாதுகாப்பு வார விழா!

     -MMH

     செயிண்ட் ஜோசப் மகளிர் கல்லூரியில் சிங்கம்புணரி போக்குவரத்து காவல்ஆய்வாளர் தலைமையில் சாலை பாதுகாப்பு வார விழா கூட்டம் நடைபெற்றது.

சிங்கம்புணரி போக்குவரத்து காவல்துறை சார்பாக சிங்கம்புணரி செயிண்ட் ஜோசப் மகளிர் கல்லூரியில் இன்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சாலை விதிகள் பற்றியும், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் கேடுகள்

கார்கள் இயக்கும்போது சீட்பெல்ட் அணிவதால் உண்டாகும் பலன்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து போக்குவரத்து காவல்ஆய்வாளர் மனோகரன் கல்லூரி மாணவிகளிடம் எடுத்துரைத்தார்.

இரு சக்கரவாகனம் இயக்கும்போது தலைகவசம் கண்டிப்பாக அணியவேண்டும் எனவும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அருகில் உள்ளவர்களிடம் எடுத்துரைக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

ஓட்டுனர் உரிமம், காப்பீடு சான்றிதழ் இல்லாமல் வாகனம் ஓட்டக்கூடாது. இதனால் ஏற்படும் நன்மை தீமைகளை பற்றியும் போக்குவரத்து காவல்துறையினர் எடுத்துரைத்தனர்.
இந்த நிகழ்வில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மனோகரன், போக்குவரத்து தலைமை காவலர் ஜெகன்நாத், குணசேகரன், உதவி ஆய்வாளர் ஜானகிராமன்,  போக்குவரத்து காவலர்கள், செயிண்ட் ஜோசப் மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர் அருள்சகோதரி. மார்கரெட்பாஸ்டின், கல்லூரி செயலர் முனைவர் அருள்சகோதரி. சூசைமேரி, கல்லூரி NSS ஒருங்கிணைப்பாளரும் கணிதத்துறை உதவி பேராசிரியருமான சுதா ஆகியோர் கலந்துகொண்டனர்.

- அப்துல்சலாம்.

Comments