பொன்னமராவதி அருகே இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம்!

     -MMH
     புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே வார்பட்டி நடுநிலைப்பள்ளியில் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்க நிதியுடன் பொன்னமராவதி வட்டார களஞ்சியமும், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையும் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

இதில் கண்புரை உள்ளவர்களுக்கும், பார்வை குறை உள்ளவர்களுக்கும் இலவசமாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. மேலும் ஒரு சிலருக்கு அறுவைசிகிச்சை மேற்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டதோடு, அவர்களுக்கு இலவசமாக அறுவைசிகிச்சை செய்ய மதுரை மண்டல கிராமப்புற ஒருங்கிணைப்பாளர் ராஜலட்சுமி வழிகாட்டுதல்படி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நூற்றுக்கும் ‌மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.

நிகழ்ச்சியில் வார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அழகுமலர் மலைச்சாமி, ஒருங்கிணைப்பாளர் மங்களம், மதுரை அரவிந்த்  மருத்துவர்கள்  கோமல், தீபிகா ஒருங்கிணைப்பாளர் விவேகானந்தன், மண்டல சுகாதார ஒருங்கிணைப்பாளர் முத்தையா ஆகியோர் கலந்து கொண்டனர்.

 - M.சதாம் உசேன், பொன்னமராவதி.

Comments