முக கவசத்தை மறந்து போன மக்கள்..!!

      -MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதிகளில் முககவசம் பயன்படுத்துவதை மறந்து போன மக்கள்.

கடந்த 6 மாதத்திற்கு மேல் கொரோனோ என்ற நோய் தொற்றின் காரணமாக மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வந்ததோடு உலகத்தையே புரட்டி போட்டது மட்டுமல்லாது வாழ்வாதாரம், பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றை சோதித்து பார்த்தது இந்த கொடிய நோய்த்தொற்று.

இதனை கருத்தில் கொண்டு முகக்கவசம் அணிய அனைத்து மக்களுக்கும் அரசு மருத்துவர்கள் சுகாதார துறை விழிவுணர்வு செய்து வந்தது. தற்போது மக்கள் இயல்பு நிலைக்கு வந்தது. அந்த முக கவசம் அணிவதை தவிர்த்து வருகின்றனர். விழிபடைவார்களா நம் மக்கள் ???

அரசு அபராதம் இடும் வரையில் இப்படித்தானா.. ???

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி கிழக்கு.

Comments