எம்ஜிஆர் ஜெயலலிதாவுக்கு கோவில் மதுரையில் பிரமாண்டம்!!

     -MMH

மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு சிலைகள் அமைக்கப்பட்டு, அவர்களுக்காகவே ஒரு கோவில் மதுரை அருகே அமைக்கப்பட்டுள்ளது.

இதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  திறந்து வைத்தார்.

மதுரை, திருமங்கலம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட டி.குன்னத்தூரில் சுமார் 12 ஏக்கரில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது.

தமிழக வருவாய்த்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டின் பேரில் ஜெயலலிதா பேரவை மற்றும் அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இப்படி ஒரு கோவில் கட்டப்பட்டுள்ளது. இதற்காக 6 மாதங்களாக காப்பு கட்டி விரதம் இருந்து வந்துள்ளார் ஆர்.பி.உதயகுமார் என்கிறார்கள்.

இந்த கோவிலில் ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆருக்கு சிலைகள் உருவாக்கி வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிலையும் சுமார் 400 கிலோ எடை கொண்டது. முழு உருவ வெண்கல சிலையாக நிறுவப்பட்டு உள்ளன. இந்த கோவிலை அமைக்க ரூ.50 லட்சம் செலவிடப்பட்டது.

இந்த கோவில் திறப்பு விழா நேற்று  மதியம் 1 மணியளவில் நடைபெற்றது. அதற்காக யாக சாலை பூஜைகள் தொடங்கி நடந்து வந்தன. நேற்று  கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் திறப்பு விழாவில் பங்கேற்றனர். எடப்பாடி பழனிச்சாமி ரிப்பன் வெட்டி கோவிலை பக்தர்கள் பயன்பாட்டுக்கு முறைப்படி துவங்கி வைத்தார். இதில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

V. ராஜசேகரன்,தஞ்சாவூர்.

Comments