உடல் எடையும், தொப்பையும் வேகமாக குறைக்கணுமா..? இந்த பானத்தை குடியுங்கள்!!

     -MMH 

     இன்றைய காலத்தில் உடலுக்கு போதுமான உழைப்பு கொடுக்காமல் இருப்பதால், ஏராளமானோர் உடல் பருமன் மற்றும் தொப்பையால் கஷ்டப்பட வேண்டியுள்ளது. ஒருவரது உடல் எடையை அதிகரிப்பது என்பது மிகவும் எளிது. ஆனால் அதைக் குறைப்பது தான் மிகவும் கடினம். அதிலும் கொரோனா ஊரடங்கிற்கு பின், பல மாதங்களாக வீட்டிலேயே இருந்து வேலை பார்த்து வருவதால், ஏராளமானோரின் உடல் எடை மற்றும் தொப்பையின் அளவு அதிகரித்துள்ளது.

ஒருவரது அதிகரித்த உடல் எடையைக் குறைக்க ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சிகள் உதவும் என்பது நாம் அனைவருமே அறிந்திருப்போம். இருப்பினும், ஒருசில பானங்கள் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் தேங்கியுள்ள அதிகப்படியான கொழுப்புக்களை வேகமாக எரிக்க உதவி புரிந்து, விரைவில் உடல் எடை மற்றும் தொப்பையைக் குறைக்க உதவுகின்றன.

அந்த வகையில், இன்று நாம் உடல் எடையைக் குறைக்கும் இலக்கை அடைய உதவும் ஓர் அற்புதமான பானத்தைப் பற்றி தான் இப்போது பார்க்கப் போகிறோம். சொல்லப்போனால், இந்த பானத்தை தான் நம் முன்னோர்கள் அன்றாடம் குடித்திருப்பார்கள் போல். அதனால் தான் என்னவோ, நம் முன்னோர்கள் தொப்பையின்றி நீண்ட நாட்கள் ஃபிட்டாக இருந்துள்ளார்கள்.

பொதுவாக எலுமிச்சை ஜூஸ் என்றதும் நாம் அந்த ஜூஸில் சர்க்கரை அல்லது தேனைக் கலந்து குடிப்போம். ஆனால் எலுமிச்சை ஜூஸில் வெல்லத்தைக் கலந்து குடிக்கலாம் என்பது தெரியுமா? இது ஒரு வித்தியாசமான சுவையில் இருப்பதோடு, உடல் எடையை வேகமாக குறைக்க உதவி புரியும். மேலும் இந்த மாதிரியான வெல்லம் கலந்த எலுமிச்சை ஜூஸ் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் உடலுக்கு வழங்கக்கூடியவை. 

எலுமிச்சையின் நன்மைகள்:

வைட்டமின் சி அதிகம் நிறைந்த எலுமிச்சை, உடல் எடையைக் குறைக்க உதவும் பிரபலமான பழம். அதோடு இந்த எலுமிச்சை உடலின் மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்களையும் வெளியேற்ற உதவும். எலுமிச்சையில் உள்ள பாலிஃபீனோல் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடல் எடையைக் குறைத்து பராமரிக்க உதவும். மேலும் இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் கொழுப்புக்கள் தேங்குவதைத் தடுப்பதுடன், கெட்ட கொழுப்புக்களின் அளவையும் குறைக்கும்.

வெல்லத்தின் நன்மைகள்:

வெல்லம் உடலின் மெட்டபாலிசம்/வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவி, உடல் எடையை வேகமாக குறைக்க உதவி புரியும். அதோடு இதில் புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து போன்றவையும் அதிகம் உள்ளது. இந்த இரண்டுமே உடல் எடையைக் குறைக்கும் போது மிகவும் அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களாகும். அதோடு வெல்லம் சர்க்கரைக்கான ஒரு சிறந்த மற்றும் ஆரோக்கியமான மாற்றுப் பொருள். இதில் கலோரிகள் குறைவு மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் பண்புகளும் உள்ளன. வெல்லத்தை எலுமிச்சை சாறுடன் சேர்த்து எடுக்கும் போது, செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருப்பதுடன், சுவாச மண்டலம் சுத்தமாகவும் இருக்கும்.

இப்போது இந்த ஜூஸை எப்படி தயாரிப்பது என்பதைக் காண்போம்.

பானம் தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள்:

* எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்

* வெல்ல பவுடர் - ஒரு டீஸ்பூன்

* வெதுவெதுப்பான நீர் - ஒரு டம்ளர்

பானம் தயாரிக்கும் முறை மற்றும் எப்போது குடிக்கலாம்?

ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி வெதுவெதுப்பாக சூடேற்றி இறக்கிக் கொள்ள வேண்டும். பின் அதில் வெல்லத்தை சேர்த்து நன்கு கலந்து, அதன் பின்னர் எலுமிச்சை சாற்றினை சேர்த்து மீண்டும் கலந்தால், பானம் தயார். இந்த பானத்தை ஒருவர் தினமும் காலையில் எழுந்ததும் காபி, டீ-க்கு பதிலாக வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடல் எடையும், தொப்பையும் வேகமாக குறைவதைக் காணலாம்.  

-ஸ்டார் வெங்கட்.

Comments