உதவும் இதயங்கள் அறக்கட்டளை நிறுவனர் ரோகிணிக்கு தங்க மகள் விருது..!

-MMH

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் பல்வேறு சமூக சேவைகள் செய்து வரும்  உதவும் இதயங்கள் அறக்கட்டளை நிறுவனர் ரோகினிக்கு தங்க மகள் விருது வழங்கி கௌரவிப்பு.


சிங்கம்புணரி உதவும் இதயங்கள் அறக்கட்டளை சார்பாக ஏழை எளிய மக்கள், சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்றோர்களுக்கு  உணவு - உடை வழங்குதல், அவர்களை மீட்டெடுத்து காப்பகத்திற்கு அழைத்து செல்லுதல், 


பேரிடர் காலங்களில் நிவாரண உதவிகள் வழங்குதல், காப்பகங்களுக்கு சென்று உணவிற்கு உதவுதல், மரக்கன்றுகள் பனைவிதைகள் நடவு செய்தல் மற்றும் இயற்கையை பாதுகாத்தல் மருத்துவமுகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துதல், 


ஏழை மாணவர்களுக்கு கல்விக்கு உதவுதல் அந்தந்தத் துறையில் சிறப்பாக செயல்படுபவர்களை பாராட்டி அவர்களை ஊக்குவிக்கும் வகையில் விருது வழங்குதல் என பல்வேறு சமூக சேவையில் சிறப்பாக செயல்படும் உதவும் இதயங்கள் அறக்கட்டளை நிறுவனர் ரோகிணிக்கு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அறக்கட்டளை சார்பாக 'தங்கமகள் 2020' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

-அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments