திருக்கோஷ்டியூரில் மக்கள் கிராம சபை கூட்டம்! எம்.எல்.ஏ. பெரியகருப்பன் பங்கேற்பு!!

      -MMH

     திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில், திமுக சார்பில் மக்கள் கிராம சபைகூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு  சிவகங்கை மாவட்ட திமுக செயலாளரும், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை தாங்கினார்.

ஒன்றியச் செயலாளர் சண்முகவடிவேல் முன்னிலையில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் 'அதிமுகவை நிராகரிக்கிறோம்' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த மக்கள் கிராம சபைக்கூட்டத்தில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற கோஷங்களுடன் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை திமுகவினர் விநியோகித்தனர். முன்னதாக ஒன்றிய குழு உறுப்பினர் இராமேஸ்வரி கருணா வரவேற்புரையாற்றினார். பின்பு திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.பெரியகருப்பன் அதிமுகவை நிராகரிப்போம் என்ற கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

அதில், அங்கு கூடியிருந்த பொதுமக்கள் அதிக அளவில் கையெழுத்திட்டனர். இந்நிகழ்ச்சியில் பெண்கள், இளைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் ஏடிஎன்.ரவி,  ஒன்றிய கவுன்சிலர் சகாதேவன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் சண்முகநாதன், மாவட்ட விவசாய அணி எஸ்.எஸ்.அருணாச்சலம், அவைத்தலைவர் திருநாவுக்கரசு, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜ்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் தமிழ்நம்பி,  முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கே.எஸ்.நாராயணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கம், தென்மாவளி ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ், நகர இளைஞரணி அமைப்பாளர் பசீர் அகமது, திருக்கோஷ்டியூர் கிளைக் கழகச் செயலாளர் கார்த்தி சக்கரவர்த்தி, தானிப்பட்டி கிளைச் செயலாளர் இளையராஜா, தானிப்பட்டி ஒன்றிய பிரதிநிதி நாகராணி, திருக்கோஷ்டியூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தானிப்பட்டி சோமசுந்தரம், ஒன்றிய பொருளாளர் கண்ணன், கண்டவராயன்பட்டி சண்.சீமான் சுப்பையா, அஜீஸ், சுண்ணாம்பிருப்பு கண்ணன், ஜெகன்,  கண்டவராயன்பட்டி சசிகுமார், திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய அமைப்பாளர் அரிஹரசுதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் சின்னத்துரை, மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

- அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments