ஆப்பிள் சாப்பிட்டால் இது எல்லாம் நடக்குமா..?
குடலில் உள்ள கிருமிகளை வெளியேற்றி குடற்புண் போன்ற பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது. ஆண்கள் தினசரி ஆப்பிள் பழம் சாப்பிட்டால் விந்து உற்பத்தி அதிகரிக்கும். கண்புரை, கண் பார்வையில் பாதிப்பு இருப்பவர்கள் ஆப்பிளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தமான நோய்கள் தீர்ந்து விடும்.
நீரிழிவு நோய் தாக்கம் உள்ளவர்கள் நோயை கட்டுக்குள் வைத்திருக்க ஆப்பிள் உதவுகிறது. இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது. பிறந்து 6 மாதம் ஆன குழந்தைகளுக்கு ஆப்பிள் ஒரு சிறந்த உணவாகும். ஆப்பிளை நன்றாக வேகவைத்து மசித்து கொடுத்து வந்தால் குழந்தை கொழுகொழுவென்று இருக்கும்.
ஆப்பிளை பழமாகவோ, ஜூஸாகவோ ,சாலட்டகவோ சாப்பிட்டு வருவது உடலுக்கு மிகவும் நன்மை தரும். ஆப்பிளை நன்றாக மசித்து சிறிதளவு தேன் கலந்து முகத்தில் தடவவும். பின்னர் அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் முகம் பளிச்சிடும். முகத்தில் உள்ள சுருக்கங்கள், கரும்புள்ளிகள் மறைந்து முகம் போலிவு பெரும்.
-ஸ்டார் வெங்கட்.
Comments