குழியில் சிக்கி தவிக்கும் அரசு பஸ் அச்சத்தில் பயணிகள்..!!

 

-MMH 

கோவை மாவட்டத்தில் சாலைகளில் தோண்டப்படும் குழிகளால் பஸ்சும் லாரியும் அடிக்கடி சிக்கித்தவிக்கும் நிலை காணப்படுகிறது நேற்றையதினம் காந்திபுரத்தில் இருந்து வெள்ளலூர் வரை செல்லக்கூடிய பேருந்து ஒன்று ரோட்டோரத்தில் தோண்டப்பட்ட  குழியில் சிக்கியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிகழ்வு கோவை மாவட்டத்தில் அடிக்கடி நடைபெறுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர் இது போன்ற விபத்துகள் இதற்கு முன்பு ஜிடி டேங்க் அருகிலும் கடைவீதி பகுதியிலும்  நடைபெற்றதாகவும் இன்று போத்தனூர் வெள்ளலூர் ரோடு ஜிடி வைய்லர்  அருகில் ஏற்பட்ட விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள்  தப்பினர்.  

இதுபோன்றவிபத்துகள் நடைபெறாமல் இருக்க உடனடியாக சாலைகளை சரி செய்யுமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பினர் இதனை  மாநகராட்சி நிர்வாகம்  கருத்தில் கொண்டு சரி செய்து தர வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கேட்டுக் கொள்கின்றனர்.

-ஈசா கோவை.

Comments