தேவகோட்டையில் முக்கிய சாலையின் அவல நிலை! நாம் தமிழர் கட்சியினர் சீரமைப்பு!

     -MMH

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில், அரசு அலுவலங்கள் மற்றும் அரசு மருத்துவமனைக்கு செல்ல கூடிய முக்கிய பிரதான சாலையான இராமேஸ்வரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை மிக மோசமாக பழுதடைந்து பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருக்கின்றது. 

இதனைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சியின் சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாயல்ராம் தலைமையில், காரைக்குடி வீரத்தமிழர் முன்னணியின் தொகுதி செயலாளர் ஒருங்கிணைப்பில், நெடுஞ்சாலைத் துறையைக் கண்டித்து தாமாகவே சாலையை செப்பனிடும் போராட்டம் நடைபெற்றது.

இதில் 50க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

- சங்கர், தேவகோட்டை. 

Comments