ஹலோ! வெயிட் எ மினிட்!!

-MMH

செல்போனை எந்தெந்த இடங்களில் வைக்க கூடாது வைத்தால் என்ன நடக்கும் என்று இங்கே பார்க்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் செல்போன் என்பது நமக்கு அடிப்படை ஒன்றாக மாறிவிட்டது. கொரோனா காலத்திற்கு பிறகு கல்வி மற்றும் அலுவலக சார்ந்த அனைத்து விஷயங்களுமே செல்போன் மூலமாகத்தான் நாம் செய்து வருகிறோம். எனவே செல்போனை போகுமிடமெல்லாம் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். ஆனால் பல்வேறு சுகாதாரத்துறை நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் சில இடங்களில் செல்போனை நாம் வைத்துக் கொள்ளக்கூடாது என்று

எச்சரித்துள்ளனர். ஏன் அங்கு வைக்க கூடாது மீறி வைத்தால் என்ன நடக்கும் என்பதை பற்றி இங்கே பார்க்கலாம். சட்டை பேண்ட் பாக்கெட்டில் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால் கதிர் வீச்சு தாக்குதல், கேன்சர் தாக்குதல் போன்றவை ஏற்படும்.

செல்போனை உள்ளாடைகளுக்குள் வைத்தால் பாக்டீரியா தாக்குதல்களால் நோய்கள் ஏற்படும். படுக்கையில் தலையணைக்கு அருகில் வைக்கக்கூடாது. இப்படி வைப்பதால் மூளைக்காய்ச்சல் , தூக்கமின்மை போன்ற பிரச்சினைகள் உருவாகிறது.

சார்ஜ் போடும் போது கவனிக்க வேண்டியவை என்னவென்றால் செல்போனுக்கு சார்ஜ் போட்டுக்கொண்டு கட்டாயமாக பேச கூடாது. மேலும் 100% சார்ஜ் ஆன பிறகு தொடர்ந்து போடக்கூடாது.

முகத்திற்கு அருகே வைத்து போன் பேச கூடாது. அப்படி முகத்திற்கு அருகே போனை வைத்து பேசிக்கொண்டிருந்தால் பாக்டீரியாக்கள் உருவாகி முகத்தினை தாக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் முகப்பரு, தோல் அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

செல்லுமிடமெல்லாம் அதாவது சமையலறை போன்ற இடங்களில் போன் பயன்படுத்துவது ஆபத்தானதாகும். வெளிப்புற இடங்களில் பயன்படுத்தகூடாது. மேலும் ரோடு, பீச் போன்ற சூரிய வெளிச்சம் நேரடியாக படும் இடங்களில் செல்போன் பயன்படுத்தக் கூடாது.

-Ln.இந்திராதேவி முருகேசன், சோலை. ஜெய்க்குமார்.

Comments