பொள்ளாச்சியில் லாரிக்கு வந்த சோதனை..!!

     -MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மரப்பேட்டை பகுதியில் கழிவு நீர் கால்வாய் சுத்தம் செய்யப்பட்டு குப்பைகள் கழிவுகள் JCP இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன. அகற்றப்பட்ட கால்வாய் கழிவுகளை லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு பொள்ளாச்சி கிழக்கு தாராபுரம் சாலையில் உள்ள பெரியா கவுண்டணூர் பகுதியில் சாலையின் அருகில் குப்பை கால்வாய் கழிவுகள் கொட்டப்பட்டது.

தொடர்ந்து மூன்று லாரிகள் வீதம் வந்தன. முதல் லாரியில் இருந்து கொட்டும் பொழுது எதிர்பாராத விதமாக லாரி, மேலே தூக்கப்பட்டது. லாரி கவிழ்ந்து தலைதூக்கி நின்றது. தாராபுரம் கரூர் செல்லும் பிரதான சாலை என்பதால் போக்குவரத்து சற்று பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்கனவே இந்த இடத்தில் நிறைய கழிவுகள் மற்றும் கோழி கழிவுகள் வந்து கொட்டி செல்வதால் அப்பகுதி மக்கள் மிகவும் கோபத்தில் இருந்தனர். பற்றாக்குறைக்கு மீண்டும் கால்வாய் கழிவுகளை  இங்கு கொட்டிய லாரியை கண்டதும் பொது மக்கள் கார சார் கூச்சலிட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுகின்ற கழிவுகளை எதற்கும் இங்கு கொட்டுகிறீர்கள் என்ற பொதுமக்கள் திரண்டனர்.

லாரி ஓட்டுனர்கள் பதில் சொல்ல தெரியாமல் திக்கி தெனரினர். போலீசார் தகவல் அறிந்து வந்து விசாரணை செய்து போது மறப்பேட்டை கழிவுநீர் கால்வாய் இருந்து எடுத்து வரபட்டது என்றும், ஒப்பந்ததாரர் கொட்ட சொன்னதாகவும் ஓட்டுனர்கள் வடிவேல் சிவகுமார் வேலுசாமி ஆகியோர் தெரிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி கிழக்கு.

Comments