கொலஸ்ட்ராலை விரட்ட இது சூப்பர்..!

-MMH 

கொலஸ்ட்ரால் பிரச்சனை வருவதற்கு அதிகளவு ஜங்க் மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளை உட்கொள்வது மற்றும் உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறையை காரணம். அதனால் ஏராளமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதில் முக்கியமாக இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, இதய நோய் வரும். அதுமட்டுமின்றி புற்றுநோய் வரும் அபாயமும் உள்ளது. 

இதனை ஆரம்பத்திலே சரி செய்வது நல்லது. அதற்கு நல்ல தீர்வு அளிக்கும் வகையில் சித்தர்கள் பல வகையான ஆயுர்வேத மூலிகைகளை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறிந்துள்ளார். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

முதலில் 20 பூண்டு பற்களை எடுத்து கொண்டு தோல் உறித்து, அதனை நசுக்கி கொள்ளவும். பிறகு இதனை கண்ணாடி ஜாடியில் போட்டு கொண்டு, இவை மூழ்கும் அளவுக்கு தேனை இதனுள் சேர்க்க வேண்டும். இதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் அளவு சாப்பிட்டு வரலாம். மேலும், இந்த கலவையை ஃப்ரிட்ஜில் வைத்தும் பயன்படுத்தி வரலாம்.

ஜின்செங்க் (குண சிங்கி) இது கொலஸ்ட்ராலை முற்றிலுமாக வெளியேற்றி இதயத்தை பாதுகாப்பாக வைக்க இவை உதவுகிறது. முதலில் 1 கப் நீரில் கிரீன் டீயை சேர்த்து கொண்டு 5 நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க விட்டு எடுத்து கொள்ளவும். பிறகு இதனை வடிகட்டி தேன் சேர்த்து கலந்து குடிக்கவும். இந்த டீயை தினமும் 2 முறை குடித்து வந்தால் கொலஸ்ட்ரால் கரைந்து விடும். உடலில் சேர்ந்துள்ள கொலஸ்ட்ராலை வெளியேற்றுவதில் துளசி மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

முதலில் நீரை சூடு செய்து கொள்ளவும். மிதமான சூட்டில் இருக்கும் பட்சத்தில் இதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த டீயை வெறும் வயிற்றில் தினமும் 1 முறை குடித்து வரலாம். கொத்தமல்லி தினமும் உணவில் அதிகமாக சேர்த்து கொண்டால் எளிதில் கொலஸ்ட்ராலை இவை கரைத்து விடும். அத்துடன் கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் சேர்வதையும் இது தடுக்கும்.

ஆளி விதைகள் கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கிறது. மேலும், இவை மாரடைப்பு போன்றவற்றை தடுக்கவும் செய்கிறது. வெந்தத்தை தினமும் 1 ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் உங்களின் கொலஸ்ட்ரால் கட்டுக்குள் வர கூடும். மேலும், இவை செரிமான மண்டலத்தையும் சீராக வைத்து கொள்ளும்.

-ஸ்டார் வெங்கட்.

Comments