அரிசி கழுவிய தண்ணீரில் என்னென்ன நன்மைகள் இருக்கிறது..!!

-MMH

ரிசி கழுவிய தண்ணீரில் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்று இப்போது பார்க்கலாம். அன்றாடம் சாப்பாடு சமைப்பதற்காக அரிசியை கழுவி அந்த நீரை கீழே ஊற்றி விடுகிறோம். ஆனால் நாம் கீழே ஊற்றும் அந்த கழுவிய நீரில் தான் உடலுக்கு தேவையான நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன. அந்த சத்துக்கள் என்னவென்று இப்போது பார்க்கலாம்.

>.அரிசி கழுவிய நீரை தலையில் தடவி குளித்து வந்தால் முடிக்கு நல்ல பலம் கிடைக்கும்.

>.அரிசி கழுவிய நீரை காட்டனில் நனைத்து முகத்தை துடைத்து கழுவினால் முகம் பொலிவு பெறும். மேலும் முகத்தின் தோற்றம் நன்கு அமையும்.

>.தலைமுடி அதிக வறட்சியுடனும், மென்மையின்றியும் இருந்தால் அரிசி கழுவிய நீரை கொண்டு முடியை அலசி, சிறிது நேரம் கழித்து சுத்தமான நீரால் அலச வேண்டும். இதனால் தலைமுடி இயற்கை நிறத்துடனும் மிகவும் வலுவாகவும், அடர்த்தியாகவும் மற்றும் நீளமாகவும் காணப்படும்.

>.குழந்தைகளை அரிசி கழுவிய நீரை கொண்டு குளிப்பாட்டினால் குழந்தைகள் நன்றாக தூங்கும்.

>.இதில் கார்போஹைட்ரேட்டுகளும், ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளதால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும்.

-ஸ்டார் வெங்கட்.

Comments